துலாம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் உங்களுக்கு இலட்சியங்களை அடைவதற்குரிய சிறப்பான நாளாக இருக்கும். இன்று உங்களின் எதிர்பார்ப்பை காட்டிலும் நல்ல பலன்களே கிடைக்கும்.
முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு இன்று உகந்த நாள். அதிகமான வேலைப்பளு உங்களை ஆக்கிரமித்து உங்களை பிஸியாகவே வைத்திருக்கும். அதிகப்படியான வேலை காரணமாக இன்று பணியில் தவறுகள் நேரலாம். இன்று நீங்கள் உங்கள் துணையை நன்கு புரிந்துக் கொள்வீர்கள். இன்று உங்களின் துணையுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள மன அமைதியுடன் பேசுங்கள். இன்றைய அதிகப்படியான பணவரவால் உங்களின் சேமிப்பு உயரும்,
திருப்திகரமாகவும் இருக்கும். இன்று உங்களின் சேமிப்பை உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது. தொண்டை எரிச்சலுக்கான சாத்தியங்களும் உள்ளது. இதனால் குளுமையான உணவு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் சற்று மந்தநிலை நிலவும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களின் உதவி உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். இந்த நீங்க விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.