Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! உற்சாகம் ஏற்படும்..! கவனம் தேவை..!

தனுசு ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் செயல்களில் கவனம் தேவை. முடிவு எடுப்பதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. இன்று உங்களின் அன்புக்கு உரியவர்களிடம் வாக்குவாதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

பணியிடத்தில் உற்சாகமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகச்சூழல் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நீங்கள் மகிழ்ச்சியுடன் பணியாற்றுவீர்கள். இன்று உங்களின் இனிமையான மற்றும் ஊக்கமான வார்த்தைகள் உங்களின் துணையை திருப்தி அடையச்செய்யும். இனிமையான தருணங்களை உங்கள் துணையுடன் பகிர்ந்துக் கொள்கிறீர்கள். இன்று பணவரவு குறைந்து காணப்படும். இன்று சேமிக்கும் வாய்ப்புகள் உள்ளது. இன்று உங்களின் ஆரோக்கியத்திற்கு உகந்த நாள். இன்று உங்களின் உறுதியான மனநிலை தேக ஆரோக்கியத்தை நன்கு பராமரிக்க முடியும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கேளிக்கையில் மனம் ஈடுபடத் தூண்டும். கெட்ட சவகாசங்களை அறிந்தும், தவிர்த்துவிடுவது நல்லது. நீங்கள் பைரவ வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 9.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.

Categories

Tech |