பிணவறையில் கொரோனாவால் இறந்த பெண்ணின் சடலத்திடம் சில்மிஷம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
தென் அமெரிக்காவில் உள்ள கயானாவில் Port Kaituma என்ற மருத்துவமனையில் பெண்ணொருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது சடலம் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 26ஆம் தேதி Leroy Checon என்ற ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர் பிணவறையில் இறந்து கிடந்த பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துள்ளார்.
இது குறித்து காவல்துறையினருக்கு தெரியவர அவரை மிகுந்த பாதுகாப்புடன் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். சிறை தண்டனை அனுபவிப்பதற்கு முன்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது