சுரைக்காயால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு.
சுரைக்காய் நீர் சத்து மிகுந்தது. அதில் வைட்டமின் பி2 இரும்புச்சத்து, புரதம் , சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ளது.
சுரைக்காய் பித்தத்தை போக்கும் குணமுடையது. அதன் விதைகள் ஆண்மையை பெருக்கும். சுரைக்காய் சதையை நெற்றியில் வைத்து கட்டினால் வெப்பத்தால் ஏற்படுகின்ற தலைவலி குணமாகும்.
சுரைக் கொடியை பூண்டுடன் சேர்த்து சமைத்து உண்டு வந்தாலோ, அதில் நீர்விட்டு காய்ச்சி கசாயமாக்கி குடித்தாலோ உடலில் தங்கிய நீரை வெளியாக்கி உடல் வீக்கம் குறையும்.
சுரைக்கொடி, நீர் முள்ளி, வெள்ளரி விதை இவை மூன்றையும் சம அளவு எடுத்து நீரிலிட்டு நன்கு காய்ச்சி பாதியாக வற்றியதும் வடிகட்டி குடித்து வர நீர் எரிச்சல், கல்லடைப்பு போன்றவை குணமாகும்.
சுரை விதை, வெள்ளரி விதை, பூசணி விதை, முலாம் பழ விதை இவற்றை சம அளவு எடுத்து நீரில் 2 மணிநேரம் ஊற வைத்து நன்கு அரைத்து நீர்விட்டுக் கஞ்சி போல காய்ச்சி உட்கொள்ள கொடுத்து வந்தால் சிறுநீரை நன்கு பெறுகச் செய்து நீர் எரிச்சல், கல் அடைப்பு , பெருவயிறு போன்றவை குணமாக்கும்.