நள்ளிரவில் வந்த மிஸ்டு காலால் காதலியை காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
டெல்லியில் துவாரகாவில் வசித்து வருபவர்கள் சதீஷ்குமார் திஷு குமாரி. இவர்கள் இருவரும் ஐடி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் ஒருவருக்கு ஒருவர் காதலித்து வந்தனர். வாரத்தின் இறுதி நாட்களில் இருவரும் ஒன்றாக தங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்நிலையில் வழக்கம்போல் திஷு குமாரி சதீஷ் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அந்தப் பெண்ணிற்கு நள்ளிரவு நேரம் யாரோ மிஸ்டு கால் கொடுத்து உள்ளனர். இதனால் சந்தேகம் கொண்ட சதீஷ்குமார் திஷு குமாரியிடம் அவரது செல்போனை கேட்டுள்ளார். ஆனால் திஷு குமாரி தனது காதலன் தன்னை சந்தேகப்படுவதாக நினைத்து சண்டை போட்டுள்ளார்.
அதன் பிறகு மீண்டும் சதீஷ் தனது காதலியின் போனை கேட்டு டார்ச்சர் செய்துள்ளார். ஆனால் திஷு குமாரி செல்போனை கொடுக்காமல் இருந்ததால் ஆத்திரமடைந்த சதீஷ் தான் காதலித்த பெண் என்றும் பாராமல் அடித்து கொலை செய்து விட்டார். அதன்பிறகு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு கொலை செய்து விட்டு தப்பி ஓடிய சதீஷை தேடத் தொடங்கினர். அவர் அசாமில் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.