Categories
உலக செய்திகள்

விரைவில் கொரோனாவை வென்று வருவேன் – அதிபர் டிரம்ப்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா அதிபர் டிரம்ப் தம் நலமுடன் இருப்பதாகவும் வைரஸ் தொற்றிலிருந்து விரைவில் மீண்டு வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.

அலபாமா மாகாணத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அதிபர் டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இருந்ததை விட தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் வீடியோவில் தெரிவித்திருக்கிறார். தமக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொற்றிலிருந்து மீண்டுவர வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் டிரம்ப் நன்றி கூறியுள்ளார்.

விரைவில் கொரோனாவை வென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்றும் அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மேலனியாவின் உடல்நிலையும் சீராக உள்ளதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். 74 வயதான டிரம்ப்பிற்கு உடல் பருமன் பிரச்சனையும் உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் அவரது உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து அடுத்த கட்ட சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |