சிறுமி கொலை குறித்து சுரேந்திர சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்தால் மக்கள் கொந்தளித்து உள்ளனர்.
ஹத்ராஸ் 19 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் பற்றி சுரேந்திர சிங் செய்தியாளர்களிடம் உரையாடினார். அப்போது “நான் ஆசிரியர். அரசு கையில் வாளுடன் நின்றாலும் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியாது. தங்கள் மகள்களுக்கு பெற்றோர்கள் நல்ல பண்புகளை கற்று கொடுத்து வளர்க்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும். உரிய பாதுகாப்பை வழங்குவது அரசின் கடமை தான்.
ஆனால் அதே போன்று குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை கற்று கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. கண்ணியமாக நடந்து கொள்ள மகள்களுக்கு பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். நல்ல பண்புகளும் அரசும் இணைந்தால் மட்டுமே நாட்டை அழகாக மாற்ற முடியும் இதை தவிர வேறு வழியில்லை” என அவர் கூறினார்.
அவரது இந்த கருத்து பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு பெண்கள் தான் முழு காரணம் என்ற நோக்கத்தில் அமைந்திருந்ததால் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பலரும் குழந்தைகள் வன்கொடுமைகளுக்கு யார் காரணம் என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர். அதோடு இத்தகைய கருத்தை கூறிய சுரேந்திர சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்க பலர் வலியுறுத்தி வருகின்றனர்.