உணவு உட்கொள்ளும் போது எந்த திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடுவது நல்லது என்பது பற்றிய தொகுப்பு.
கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் ஜாதகத்தில் குறிப்பிட்டிருக்கும் திடீர் மரணம் என்ற நிலைகூட மாறி ஆரோக்கியம் அதிகரிக்கும். ஜாதகத்தில் மோசமான நிலை இருந்தால் அவர்கள் எப்போதும் கிழக்கு முகமாக அமர்ந்து சாப்பிட வேண்டும். இதனால் அவர்களது உடல் நலம் சீராக இருக்கும். அகால மரணம் பற்றிய அச்சம் போய்விடும்.
ஒருவர் வெகு நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர் மேற்கு நோக்கி அமர்ந்து உணவு சாப்பிடவேண்டும். மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிடுவதனால் உடல் ஆரோக்கியம் அதிகரிப்பதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனால் கூடுமானவரை நோயாளிகள் மேற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட அறிவுறுத்தப்படுகின்றனர்.
அதிகமாக பண பிரச்சனை இருந்தால் குடும்பத்தலைவர் வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும். அனைவரும் வடக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் இல்லத்தில் மகிழ்ச்சியும் செல்வமும் அதிகரிக்கும். வாஸ்து சாஸ்திரம் படி உணவு உண்ணும்போது தெற்கு திசை நோக்கி அமரக்கூடாது. எதிர்மறையான எண்ணம் கொண்டவர்கள் அதில் இருந்து மீண்டு வர தெற்கு திசையை பார்த்து அமர்ந்து சாப்பிடுவது நல்லது.
அதன் பிறகு கிழக்கு திசையை பார்த்து சாப்பிடுவது நல்லது. தெற்கு திசையை பார்த்து சாப்பிடுவதனால் எதிர்மறை சிந்தனை மன குழப்பம் போன்றவற்றிலிருந்து விடுபட முடியும் அவ்வாறு விடுபட்ட பிறகு கிழக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிடுவது பல நன்மைகளைக் கொடுக்கும்.