Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1இல்ல… 2இல்ல…. 100 பெண்கள்…. இப்படி தான் ஏமாந்தாங்க….. குற்றவாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்…!!

ஆன்லைன் மூலம் சேலை விற்பதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள ஓட்டேரி பகுதியை சேர்ந்த இந்திரா பிரகாஷ் என்பவர் சில தினங்களுக்கு முன்பு காவல் துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் “வாட்ஸ்அப் மூலம் அறிமுகமான நபர் ஒருவர் குறைவான விலையில் புடவை உள்ளிட்ட ஆடைகள் விற்பனை செய்து வருவதாக கூறினார். அதன் பிறகு என்னை வாட்ஸ்அப் குழு ஒன்றில் சேர்த்து விட்ட அந்த நபர் பெண்கள் அணியும் அழகான சேலைகள் மற்றும் பல ஆடைகள் போன்றவற்றை குழுவில் பகிர்ந்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து இந்திரா பிரகாஷ் அக்கம்பக்கம் இருந்தவர்களையும் இந்த குழுவில் சேர்த்துவிட்டார்.  இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக நேரில் வருவது முடியாத காரியம்.

அதனால் தேவையான ஆடையை தேர்ந்தெடுத்து அனுப்பிவிட்டு அதற்கான பணத்தை வங்கி கணக்கில் செலுத்திவிட்டால் ஆடைகள் கூரியர் மூலமாக வீட்டிற்கு வந்துவிடும் என அந்த நபர் தெரிவித்துள்ளார். இதனால் அந்த நபர் சொன்னதை நம்பி இந்திரா மற்றும் அவரது அக்கம்பக்கம் வீட்டினர் பணத்தை வங்கிக்கு அனுப்பியுள்ளனர். அதன் பிறகு சிறிது நேரத்திலேயே அந்த வாட்ஸ் அப் குழு கலைக்கப்பட்டுள்ளது. அதோடு தனது போனையும் அந்த நபர் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து இந்திரா பிரகாஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரை ஏற்ற காவல்துறையினர் கிரைம் பிரான்ச் காவல்துறையினருக்கு மோசடியில் ஈடுபட்ட வரை கண்டுபிடிக்க உத்தரவிட்டது. அவர்கள் செல்போன் எண் மற்றும் வங்கிக் கணக்கு போன்ற விபரங்களை வைத்து மோசடியில் ஈடுபட்ட சென்னை தாம்பரத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை கண்டறிந்தனர். அதன்பிறகு காவல்துறையினர் விரைந்து சென்று அவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினார்.அப்போது சமூக வலைதளம் மூலமாக வசதி உள்ள நடுத்தர வயது உடைய பெண்களை தொடர்புகொண்டு அவர்களை வாட்ஸ்அப் குழு ஒன்றில் சேர்த்து அவர்களுக்கு தேவையான பொருட்களை பகிர்வதாக கூறினார்.

அதன் பிறகு 20 பேருக்கு மேல் சேர்ந்ததும் பொருட்களை தேர்ந்தெடுக்க கூறிவிட்டு பணத்தை வங்கி கணக்கில் போட சொல்லுகின்றனர். பணம் வங்கி கணக்கிற்கு மாறியதும் வாட்ஸ் அப் குழு’வை அழித்துவிட்டு தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டு வேறு ஒரு குழு உருவாக்கி அடுத்த மோசடியை அரங்கேற்ற சென்று விடுவதாக தெரிவித்துள்ளார். சில ஆயிரங்கள் வரை மட்டுமே ஏமாற்றபடுவதாலும் கணவருக்குத் தெரியாமல் ஆர்டர் செய்வதாலும் பலர் புகார் அளிக்க மாட்டார்கள். இதுவரை நூற்றுக்கும் அதிகமான பெண்களை சென்னையில் மட்டும் ஏமாற்றி இருப்பதாகவும் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை என்றும் கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |