முதலமைச்சரை மூன்று அமைச்சர்கள் சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அடுத்த வருடம் மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. சில மாதங்களே அதற்க்கு இருக்கும் நிலையில், அதிமுக கட்சியில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற குளறுபடி தொடங்கியுள்ளது. இதனால் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைத்து அந்த குழு தான் கட்சியும் ஆட்சியும் வழி நடத்துவதோடு வேட்பாளரையும் தேர்வு செய்து அனைத்து விஷயங்களிலும் முடிவை எடுக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
இதனிடையே அதிமுகவின் செயற்குழு துணை ஒருங்கிணைப்பாளர் வரும் 7ஆம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனால் எடப்பாடி மற்றும் பழனிச்சாமி என இருவரது ஆதரவாளர்களும் தனித்தனியாக கலந்து ஆலோசித்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் பழனிச்சாமியை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, செங்கோட்டையன் மற்றும் வேலுமணி ஆகிய 3 பேரும் சந்தித்து பேசியுள்ளனர். முதலமைச்சரை அமைச்சர்கள் 3 பேர் இரவு நேரத்தில் தனியாக சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பன்னீர்செல்வம் பெரியகுளம் அருகில் இருக்கும் பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.