உத்தர பிரதேசத்தில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பாக இன்று பேரணி நடைபெறுகின்றது.
நாட்டையே உலுக்கிய உத்தரப்பிரதேசத்தில் பட்டியல் இன பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு நாட்டின் பல முனைகளிலும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதே போல திமுக சார்பாக இன்றைய தினம் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப்பிரதேசத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு ஒளி ஏந்தி இந்த பேரணி நடைபெறும் என்று சொல்லியிருக்கிறார்கள். திமுக மகளிரணி செயலாளராக இருக்க கூடிய, நாடாளுமன்ற எம்பி கனிமொழி தலைமையில், மாலை இந்த போராட்டம் நடைபெறும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
ஏற்கனவே ஊரடங்கு காலத்தில் தடையை மீறி கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது தொடர்பாக ஸ்டாலின் உட்பட திமுகவினர் மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இதற்கும் போலீஸ் அனுமதி இல்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இருந்தும் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என திமுக சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது.