Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தலையில் டப்பாவுடன் சுற்றிய அணில்…. தொழிலாளியின் மனிதாபிமான செயல்…. குவியும் பாராட்டு…!!

அணில் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவை அகற்றிய தொழிலாளிக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்த நன்னிலம் அருகே மூங்கில்குடி பகுதியில் வசித்து வருபவன் முருகானந்தம். கூலித் தொழிலாளியான இவர் நேற்று காலை வயலுக்குச் சென்றார். அப்பொழுது பெருமாள் கோவில் அருகில் அணில் ஒன்று தன் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவுடன் இங்கு,அங்குமாக வலியுடன் அலைந்து கொண்டிருந்தது. அதைக்கண்ட முருகானந்தம் அணிலை பிடித்து தலையில் சிக்கிய டப்பாவை எடுக்க முயற்சி செய்தபோது அது  ஓரிடத்தில் இல்லாமல் அங்குமிங்குமாய் சென்றதால் அதனை  பிடிக்க முடியவில்லை.

அப்பொழுது அந்த வழியாக சென்ற சிலர் உதவியுடன் அணிலை பிடித்து  அதன் தலையில் இருந்த பிளாஸ்டிக் டப்பாவை லாவகமாக எடுத்தார். அணில் மயக்கநிலையில் இருந்தது. அதற்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தை தெளிய வைத்தார். மயக்கம் தெளிந்ததும் அங்கிருந்து துள்ளி குதித்து ஓடியது. அணிலின் உயிரை மனிதநேயத்துடன் காப்பாற்றிய முருகானந்தத்திற்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Categories

Tech |