Categories
தேசிய செய்திகள்

“சொத்து வேணும்” சிறுமியை கொன்று…. நாய்க்கு போட்ட மாமாக்கள்…!!

சொத்துக்காக 15 வயது சிறுமியை கொன்று நாய்க்கு போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தில் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் ஏராளமான சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்துள்ளார். அந்த சொத்துக்கள் அனைத்தும் அவர் மேஜர் ஆனதும் அவரது கைக்கு செல்ல இருந்தது. இதனால் தற்போது சொத்துக்களை அனுபவித்து வரும் உறவினர்கள் சிறுமியை கொலை செய்துவிட முடிவு செய்தனர். அதன்படி சிறுமியின் தாய் மாமாக்களான லியா லால் மற்றும் பிரிட்ஜ் லால் ஆகிய இருவரும் சேர்ந்து சிறுமியை கொலைசெய்து அங்கிருந்த காட்டுப்பகுதியில் போட்டுச் சென்றனர்.

காட்டிலிருந்த நாய்கள் இறந்து கிடந்த சிறுமியின் உடலை கடித்துக் குதறி உள்ளது. மறுநாள் காட்டிற்கு சென்ற நபர் ஒருவர் சிறுமியின் உடல் நாய் கடித்து குதறிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்ற சந்தேகத்தில் விசாரணையை தொடங்கினார்.

ஆனால் பிரேத பரிசோதனையின் முடிவில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் சொத்துக்காக சிறுமியை அவரது தாய்மாமாக்கள் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |