பணம் வைத்து சூதாடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்த சூளகிரி காவல்துறையினர் தொப்பூர் முனீஸ்வரன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ,அங்கு சிலர் பணம் வைத்து சூதாட்டம் ஆடிகொண்டிருத்தனர். சூதாட்டம் ஆடிய கூலியம் கிராமத்தில் வசிப்பவர் லட்சுமணன் (வயது 33) என்பவரையும் எலத்தகிரி ராம் நகரில் வசித்து வருபவர் முருகன் (வயது 38) மற்றும் எலசேப்பள்ளியைச் சேர்ந்த முரளி (வயது 35) என்ற 3 பேரையும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் . பின்பு அவர்களிடம் இருந்து ரூ . 29, 760 பறிமுதல் செய்யப்பட்டன.