திருச்சி சங்கிலி ஆண்டபுரம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதமானது.
திருச்சி சங்கிலி ஆண்டபுரம் பகுதியில் உள்ள ராமமூர்த்தி பகுதியில் ஒரு குடிசையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து வேகமாக தீ அருகே இருந்த குடிசைக்கு பரவியது. பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு துறையினர் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.