மறைந்த இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனின் திருவுருவப்படத்திற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன் விநாயகர் சதுர்த்தியை தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் கொண்டாட காரணம் ஐயா ராமகோபாலன் தான் என்றார். தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற மதமாற்றத்தை தடுப்பதற்கு அனைத்து கிராமங்களிலும் அவர் சென்றதாக கூறினார்.
ஒரு சம்பவம் நடைபெற்றால் அது அரசியல் லாபம் பார்க்க நினைப்பதை காங்கிரஸ் திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தேவையில்லாத பதற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறார்கள் எனவும் குற்றம் சாட்டினார்.