இளம்பெண் ஒருவர் நான்கு வருடங்களாக காணொளியை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது
ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் உதைப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஹேமேந்திர என்ற வாலிபர் கெம்புராவில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு சென்று இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். ஒரு நாள் அந்த 19 வயது பெண்ணை தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்து சென்றதோடு அவரை அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனை காணொளியாக பதிவு செய்த அவர் தனது நண்பர் அணில் சால்வி என்பவருடன் அதனை பகிர்ந்துள்ளார்.
காணொளியை பார்த்த அணில் சால்வி தானும் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ய வேண்டும் என்று முடிவு பண்ணினார். இதனால் அந்த காணொளியை அந்தப் பெண்ணிடம் காட்டி சமூகவலைதளத்தில் இதனை வைரலாக்கி விடுவேன் என்று மிரட்டி தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். இவ்வாறு நான்கு வருடங்களாக நண்பர்கள் இருவரும் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். அவர்கள் தொல்லையை பொறுக்க முடியாத பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து இளைஞர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.