Categories
தேசிய செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. பொறியாளர் தேர்வில் முறைகேடா ….?

கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. சிஸ்டம் இன்ஜினியர் தேர்வை 14,000 பேர் எழுதியதில் 8 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்து இருப்பதற்கு முறைகேடு காரணமா என்று தேர்வர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளார்கள்.

தமிழ்நாடு அரசு பணியில் காலியாக உள்ள சிஸ்டம் இன்ஜினியர் பதவிக்கான தேர்வு கடந்த ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அசிஸ்டன்ட் சிஸ்டம் இன்ஜினியர் பதவிக்கும் அசிஸ்டன்ட் சிஸ்டம் analyzes பதவிக்கும் என மொத்தம் 60 காலியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் 14,000 பேர் தேர்வு எழுதினர். இதில் 8 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். டி.என்.பி.எஸ்.சி. நடைபெறும் ஒவ்வொரு தேர்விலும் தேர்வு முடிந்த பின்பு கட்-ஆப் மதிப்பெண் மற்றும் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்படும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த சிஸ்டம் இன்ஜினியரிங் பதவிகளுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில் என எதையும் டி.என்.பி.எஸ்.சி. வெளியிடவில்லை. தேர்வு நடைபெற்ற ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்பாக தேர்வு முடிவுகள் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகியுள்ளது. 12 லட்சம் பேர் எழுதக்கூடிய டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் 2 மாதத்தில் வெளியிடும்போது, 14,000 பேர் சிஸ்டம் இன்ஜினியர் தேர்வு முடிவை வெளியிட ஏன் 540 நாட்கள் ஆனது என்பதே தேர்வர்களின் கேள்வியாகும்.

Categories

Tech |