மகரம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு சில அசௌகரியங்கள் காணப்படும். விளைவுகள் உங்களுக்கு சாதகமாக அமைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.
சில சௌகரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டும். இன்று உங்களின் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் காணப்படும். ஆன்மீக ஈடுபாடு அமைதியைக் கொடுக்கும். இன்று உங்களின் பணிகளை ஒழுங்காக பணியாற்ற சிறப்பாக திட்டமிட வேண்டும். இன்று நீங்கள் சிறந்த பலன்பெற கவனமுடன் பணியாற்ற வேண்டும். இன்று நீங்கள் உங்களின் துணையிடம் உணர்ச்சிகரமாக நடந்துக்கொள்வீர்கள். இந்தப் போக்கு உறவின் புரிந்துணர்வை பாதிக்கும். உங்களின் கடினமான உழைப்பிற்கு ஊக்கத்தொகை அல்லது சலுகை வகையில் பணம் கிடைக்கும் என்றாலும் சேமிக்கும் ஆற்றல் குறைந்தே காணப்படும். அதிகவேலை காரணமாக இன்று பதட்டம் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படலாம். இசைக்கேட்பதன் மூலம் ஆறுதல் பெறுவீர்கள்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.