Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாட்ஸ் ஆப் மூலம் தகவலை பெற்று பைக் திருட்டு ….!!

சென்னை காவல்துறையிடம் வகையாக சிக்கியிருக்கும் புல்லட் களவாணிகள் வாட்ஸ் அப் குழு அமைத்து திருடியது அம்பலமாகியிருக்கிறது.

திருட்டு வாகனம் என்று தெரிந்தே வாங்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து எப்படிப்பட்ட பைக் வேண்டும் என்று ஆர்டர் பெற்று அதன் அடிப்படையில் அவர்கள் திருட்டை அரங்கேற்றி இருப்பதே திரைப்பட காட்சிகள் போல சுவாரஸ்யம் மிக்கதாக இருக்கிறது. அக்டோபர் 6-ம் தேதி மக்கள் நடமாட்டமிக்க எழும்பூரில் வசிக்கும் தலைமைக் காவலரின் புத்தம் புதிய புல்லட் மோட்டார்சைக்கிள் மாயமானது. இதேபோல சொல்லி வைத்தது போல புல்லட் மோட்டார் சைக்கிள்கள் மட்டும் காணவில்லை என்று சென்னை நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, அபிராமபுரம் போன்ற காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்தன. இதையடுத்து எழும்பூர் தலைமை காவலரின் பைக் களவாடப்பட்ட தொடர் காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் கல்பாக்கம் மரக்காணம் இடையே பைக் கைமாறியது கண்டு பிடித்தனர்.

கிடுக்கிப்பிடி விசாரணையில் முதலில் சிக்கியது 27 வயதில் ஷாவி காவல்துறையில் பிடியில் வைத்திருந்த ஷாவி  நண்பர்களுடன் சென்னையில் பல்வேறு இடங்களில் 65 புல்லட் டுகளை ஆட்டையை போட்டதாக தெரிவித்துள்ளார். தகவல் பரிமாற்றத்திற்கு நமக்கு பெரிதும் உதவும் வாட்ஸாப்பை தான் திருட்டுக்களை அரங்கேற்ற இவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள திருட்டு புல்லட்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட மாடல் மற்றும் நிறம் தான் வேண்டும் என்று வாட்ஸ் அப்பில் ஆடர் தருவார்களாம். அவர்களின் தேவைகளை வைத்து சென்னையில் கண்ண மீடும் களவாணி கும்பல் ஆர்டருக்கு கச்சிதமாய் பொருந்தும் புல்லட்டுகளை திட்டமிட்டு இரவு நேரத்தில் அடித்து தூக்கிவிடுவார். கண்காணிப்பு கேமரா இல்லாத இடம் வலியே பைக்கை ஓட்டிச் சென்று ஏதாவது ஒரு ரயில் நிலைய வாகன நிறுத்தத்தில் விட்டு சென்று சில நாட்களுக்குப் பிறகு எடுத்துச் செல்வதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

செல்லும் போது போலீஸ் கண்ணில் சிக்காமல் இருக்க போலீஸ் சாவிகளையும் பயன்படுத்தி உள்ளார்களாம். திருடிய புல்லட் பெரும்பாலும் கல்பாக்கத்தில் தான் கைமாறி இருக்கிறது. சில தரகர்களுக்கு திருட்டு புல்லட்கள் டோர் டெலிவரியும் செய்யப்பட்டதாம். இரண்டு ஆண்டுகளாக போலீஸ் கண்ணில் மண் தூவி வந்த இந்த களவாணிகள் போலீஸ்காரரின் வைக்கில் கை வைத்ததால் இப்போது பொறியில் சிக்கிய எலியாகி இருக்கின்றனர். ஷாவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கேரளாவைச் சேர்ந்த சிபி விருதுநகரைச் சேர்ந்த அமிர்ஜான்  ஆகியோரை பிடித்த சென்னை காவல்துறையினர் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் புல்லட் களவாணி கும்பலிடம் தொடர்பில் இருந்த விற்பனையாளர்களுக்கு வலைவீசி வருகின்றனர்.

Categories

Tech |