Categories
தேசிய செய்திகள்

மாறிப்போன சடலம்…. இறுதி சடங்கை முடித்த குடும்பம்…. மருத்துவமனையின் குளறுபடி…!!

கொரோனா  தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் மாற்றி கொடுக்கப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு கொரோனா  தொற்றினால் உயிரிழந்த ஒருவரது உடலுக்கு பதிலாக வேறு அடையாளம் தெரியாத நபரின் உடலை வெள்ளி அன்று குடும்பத்தினரிடம் மருத்துவமனை நிர்வாகம் தவறுதலாக ஒப்படைத்துள்ளது. உடலை பெற்றுச் சென்ற உறவினர்கள் யார் என்பதை கூட அறியாமல் இறுதிச் சடங்குகளை செய்து முடித்துள்ளனர்.

இந்நிலையில் மறுநாள் மருத்துவமனைக்கு வேறு ஒருவரின் உடலை கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் இருவரும் தொற்றினால் உயிரிழந்தது உறுதி படுத்தப்பட்டுள்ளது.

 

Categories

Tech |