சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை கழிவறையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்செவல் பச்சேரி சேர்ந்தவர் குருசாமி பாண்டி. இவரது மனைவி வெள்ளத்தாய், இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் வைத்து குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து வெள்ளத்தாய் சங்கரன்கோயில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை மருத்துவமனையில் உள்ள கழிவறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த சங்கரன்கோயில் நகர் காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கழிவறையில் பெண் தற்கொலை செய்து கொண்டது மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.