உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது.
கான்பூரை அடுத்த மந்தனாவில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் இன்று காலையில் தீ விபத்து ஏற்பட்டது. சற்று நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது. ரசாயனம் நிரப்பி வைக்கப்பட்ட டிரம்கல் வெடித்து சிதறி 100 அடிக்கு மேலாக தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. நிகழ்வு இடத்திற்குச் சென்ற தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர். ரசாயன டிரம்கல் வெடித்து சிதறியதால் தொழிற்சாலையின் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.