Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வங்கியை முற்றுகையிட இந்து மக்கள் கட்சியினர் முயற்சி ….!!

ராமேஸ்வரத்தில் இந்தியன் வங்கி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட குறைந்த நேரமே செயல்படுவதாக கூறி இந்து மக்கள் கட்சியினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு நிலவியது.

இராமநாதபுர மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள இந்தியன் வங்கியில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அலுவலக நேரம் ஆகும். ஆனால் இங்கு வரும் வாடிக்கையாளர்களை பிற்பகல் 3.30 மணிக்கு மேல் அனுமதிப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அவ்வாறு வரும் வாடிக்கையாளர்களை தகாத முறையில் பேசுவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் அந்த அமைப்பினர் அலுவலர்களின் காலில் விழுந்து எங்களை உள்ளே அனுமதியுங்கள் என்று கூறிக்கொண்டு வங்கியை முற்றுகையிட முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Categories

Tech |