Categories
மாநில செய்திகள்

திருப்பதியில் கொரோனா மருத்துவமனையில் விபத்து ….!!

திருப்பதியில் கோவிட் மருத்துவமனையில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 மாத கர்ப்பிணி ஆன செவிலியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவிம்ஸ் மருத்துவ மனையில் ஒட்டியுள்ள பத்மாவதி கோவிட் மையத்தில் அரசு சார்பில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஒப்பந்த முறையில் செவிலியராக ராதிகா பணிபுரிந்து வந்தார். அதிகாலை 3:00 மணி அளவில் மருத்துவமனைக்கு வெளியே அவர் நின்று கொண்டிருந்த நிலையில் மருத்துவமனையில் நுழைவுவாயில் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் ஆறு மாத கர்ப்பிணியான செவிலியர் ராதிகா தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

கொரோனா நோயாளிகள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. மருத்துவமனை மேற்கூரை விழுந்து செவிலியர் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 6 மாத கர்ப்பமாக இருந்தாலும் ராதிகா கொரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து சேவையாற்றி வந்துள்ளார். ஆனால் பணியின் போது மேற்கூரை இடிந்து விழுந்து உயிர் உயிரிழந்தது சக ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |