காய்கறி லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் அமைந்த நெல்லிக்குப்பம் அருகே கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் லாரி ஒன்று சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தது. இத்தகவல் அறிந்த மாவட்ட காவல்துறையினர் அந்த லாரியை சோதனையிடுவதற்கு தனிப்படை காவல் துணையிருக்கு உத்தரவிட்டனர் . அதைத் தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து லாரியை சோதனையிட்டனர் . அப்போது லாரியில் காய்கறி மூட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பெட்டிகளில் காய்கறிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
அதனை அகற்றிய போது மூட்டை மூட்டையாக புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் லாரியில் இருந்த இரண்டு பேரை பிடித்து நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவர்கள் நெல்லிக்குப்பத்தில் சேர்ந்த சரவணகுமார் , காராமணிகுப்பத்தை சேர்ந்த முகமது ஷரீப் ஆகிய இருவரும் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைகளை கடத்தி வந்ததும் , காவல்துறையினருக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்கு காய்கறி மூட்டைகளின் இடையே புகையிலைப் பொருட்களை வைத்து வந்ததும் தெரிந்தது.
இந்த கடத்தலில் மேலும் அதே பகுதியை சேர்ந்த அப்துல் ரஷீத் , அக்பர் ஆகியோருக்கும் தொடர்பு இருக்கின்றது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான ஊழியர்கள் புகையிலை பொருட்களை ஆய்விட்த போது , லாரியில் பறிமுதல் செய்யப்பட்ட 200 கிலோ புகையிலை பொருட்களின் மதிப்பு சுமார் ரூ .10 லட்சம் இருக்குமென கூறப்படுகின்றது. காவல்துறையினர் தொடர்ந்து வழக்கு பதிவிட்டு சரவணகுமார் ,முகமது ஷெரீப் ஆகியோரை கைது செய்தனர் தலைமறைவான அப்துல் ரஷீத் , அக்பர் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.