உத்திரப் பிரதேசம் ரத்தர் பிரதேசமாக மாறி வருகிறது என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கனிமொழி தலைமையில் உத்திரப் பிரதேசத்தில் பாலியல் வன் கொடுமைக்கு நீதி கேட்டு ஆளுநர் மாளிகையை நோக்கி திமுக மகளிர் அணி பேரணி நடைபெற்றது.இந்தப் பேரணியை மு.க ஸ்டாலின் துவங்கி வைத்தார். அப்பொழுது அவர் பேசும்போது “ஹைதராஸ் போன்ற பாலியல் கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்திரப்பிரதேசம் முதலிடம் ,தமிழகம் இரண்டாம் இடம். உத்திரப் பிரதேசம் இன்று ரத்து பிரதேசமாக மாறிக் கொண்டிருக்கின்றது.
தமிழகம் தேர்தலை எதிர்நோக்கி உள்ளது .தேர்தலில் திமுக வெற்றி பெறும் திமுக ஆட்சியை பிடித்த பிறகு மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும்” என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறினார்.திமுக எம்பி கனிமொழி கூறுகையில்”உத்திரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. பசுமாடுகளை பாதுகாக்கும் ஆர்வத்தை பெண்கள் மீது காட்டுவதில்லை. பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பின்மை அதிகரித்து வருகின்றது”என குற்றம் கூறினார்.