வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் மர்ம நபர் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
லண்டனை சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது யாரோ ஒருவர் வீட்டின் கதவை தட்ட அந்தப் பெண் சென்று திறந்துள்ளார். அச்சமயம் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த ஒருவர் மூதாட்டியை கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் நாற்காலியில் தலை மோதி மூதாட்டி காயம் அடைந்தார். பிறகு வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் மூதாட்டியின் பையிலிருந்து பர்ஸை திருடிச் சென்றுள்ளார். அவர் சென்ற பத்து நிமிடத்தில் வங்கியிலிருந்து பணத்தை திருடுவதற்கு பர்ஸில் இருந்த கார்டை பயன்படுத்தியுள்ளார்.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர் அதில் கிடைத்த புகைப்படம் ஒன்றை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் இருக்கும் பெண்ணிடம் விசாரித்தால் சில தகவல்கள் கிடைக்கும் என காவல்துறையினர் நம்புவதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தில் காயமடைந்த மூதாட்டி அதிர்ச்சியுடனும் மன உளைச்சலுடனும் இருந்து வருகிறார்.