இந்தியாவில் கடந்த செப்டம்பரில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த செப்டம்பரில் அதிகம் விற்பனையான 10 கார்களில் மாருதி சுசுகி கார்கள் 7 இடங்களையும், ஹூண்டாய் கார்கள் மூன்று இடங்களையும் பிடித்துள்ளன. அதில், மாருதியின் ஸ்விப்ட், பலினோ, ஆல்டோ, வேகன் ஆர், டிசையர், ஹூண்டாய் கீரீட்டா, மாருதி ஈக்கோ, ஹூண்டாய் ஐ10, மாருதி எர்டிகா, ஹூண்டாய் எலைட் ஐ20 உள்ளிட்ட கார்கள் முதல் 10 இடங்களில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் கார் வாங்குவதில் குழப்பம் கொண்டிருப்பவர்களுக்கு தெளிவை ஏற்படுத்தும்.