Categories
சினிமா தமிழ் சினிமா

கணவரின் கட் அவுட்டுடன் நடிகை மேக்னாராஜ் வளைகாப்பு… நெகிழ்ச்சியான தருணம்…!!!

மறைந்த கணவரின் கட் அவுட்டுடன் நடிகை மேக்னா ராஜின் வளைகாப்பு பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் தற்பொழுது நடந்து முடிந்துள்ளது.

தமிழில் ‘காதல் சொல்ல வந்தேன்’ ‘உயர்திரு 420’ ஆகிய படங்களில் நடித்த நடிகை மேக்னா ராஜ் கன்னட சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். இவர் கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை  10 ஆண்டுகளாக காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவி சர்ஜா நடிகர் அர்ஜூனின் மருமகன் ஆவார். நடிகை மேக்னா ராஜ் 4 மாத கர்ப்பமாக இருந்தபோது அவருடைய கணவர் சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஜூன் 7ஆம் தேதி திடீரென காலமானார்.இந்த எதிர்பாராத மறைவில்  மனமுடைந்த மேக்னா ராஜ் சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிது காலம் விலகியிருந்தார் .

இந்நிலையில் நடிகை மேக்னா அவரது குழந்தைகளுடன் இருக்குமாறு புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டு வந்தன. இதை கண்டு வெகுண்டெழுந்த மேக்னா வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார். இந்நிலையில்,நடிகை மேக்னா ராஜின்  வளைகாப்பு பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் தற்போது நடந்து முடிந்துள்ளது. வளைகாப்பு நிகழ்ச்சியின் புகைப்படங்களை மேக்னா ராஜ் தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.தனது காதல் கணவரின் கட் அவுட்டை அருகில் வைத்து புகைப்படங்களை எடுத்துள்ளார் மேக்னாராஜ் . கர்ப்பிணி மனைவியான மேக்னாவின் அருகில் இருக்கும் அவரது கணவரின் கட் அவுட் அவரது ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது.

Categories

Tech |