உத்தரபிரதேச ஹத்ராஸில் இளம் பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற மாணவர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இறந்த பெண்ணின் சடலத்தை குடும்பத்தாரிடம் வழங்காமல் போலீசார் எரித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றன.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க செல்லும்போது அரசியல் தலைவர்களை தாக்கி வருகிறது உத்தரபிரதேச காவல்துறை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி ஆகியோர் இந்த தாக்குதலில் இருந்து தப்ப வில்லை. அதேநேரம் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதை போலீஸ் தடுக்கவில்லை.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பின் தேசிய பொருளாளர் ஆதீக்குர் ரஹ்மான் தலைமையில் சென்ற குழுவினரை உத்தரப்பிரதேச போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுவிக்க வலியுறுத்தி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் போராட்டம் அறிவித்துள்ளனர்.
அந்தவகையில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆதீக்குர் ரஹ்மான் மற்றும் CFI அமைப்பின் நிர்வாகிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ்நாட்டில் போராட்டம் நடைபெற உள்ளது.