புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை என அம்மாநில முதலமைச்சர் திரு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியில் மஹிலா காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. அண்ணா சிலையில் இருந்து புறப்பட்ட பேரணியில் முதலமைச்சர் திரு நாராயணசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக வந்தனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு தர வேண்டிய எந்த நிதியும் கொடுக்கவில்லை என்றும் கொரோனா காலத்தில் மத்திய அரசின் உதவியாக வெறும் ரூபாய் மூன்று கோடி மட்டுமே கொடுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.