Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து மூன்று லட்சம் சலூன்களை மூடி ஆர்ப்பாட்டம்…!!

திண்டுக்கல் அருகே 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கிடைக்காததால் மேல்முறையீடு செய்ய தமிழக அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள மூன்று லட்சம் சலூன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்த தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடிவு செய்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்துள்ள குரும்பபட்டியைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி வெங்கடாசலம் என்பவரின்  12 வயது சிறுமியை எதிர் வீட்டில் உள்ள கிருபானந்தன் என்பவர் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கிருபானந்தத்தை  கைதுசெய்தனர். இது தொடர்பான வழக்கு திண்டுக்கல்  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் கிருபானந்தன் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறிய நீதிபதி திரு புருஷோத்தமன். அவரை விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஒன்பதாம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள மூன்று லட்சம் சலூன் கடைகளை அடைத்து கவனயீர்ப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்

Categories

Tech |