கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிபர் திரு டிரம்ப் இன்று வெள்ளை மாளிகை திரும்பினார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரும் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டிருந்த நிலையில் வெள்ளை மாளிகையில் இருந்த டொனால்ட் ட்ரம்ப்பிற்கு லேசான அறிகுறியுடன் காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வந்ததை அடுத்து கடந்த 3ஆம் தேதி மேல்சிகிச்சைக்காக அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் அதிபர் டிரம்ப் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தொற்றில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்து வெள்ளை மாளிகை திரும்பினார். விரைவில் பிரசாரத்தில் ஈடுபடப் போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை திரும்பிய அவர் புகைப்படம் எடுப்பதற்காக தனது முககவசத்தை கழற்றினார். தொற்று முழுவதும் குணம் அடைவதற்கு முன்பே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை டிரம்ப் கைவிட்டு உள்ளதா சர்ச்சை எழுந்துள்ளது.