Categories
உலக செய்திகள்

மணமகளை கொன்ற மணமகன்…. திருமணத்தின் போது நடந்த கொடூரம்… இதுதான் காரணமா…?

திருமண நாளன்று மணமகன் மணமகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்தவர் stephan என்பவர் குற்றம் செய்து சிறையில் இருந்தவர். இவரை சந்தித்த Oksana என்ற பெண் தன்னால் stephan-னை  திருத்த முடியும் என முழுமையாக நம்பி அவரை திருமணம் செய்வதற்கு முடிவு எடுத்தார். ஆனால் திருமணம் நடக்கவிருந்த அன்று விருந்தினர் ஒருவருடன் தான் திருமணம் செய்யப்போகும் பெண் பேசுவதைப் பார்த்த stephan அவர் மீது குற்றம் சுமத்தி அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

குடிபோதையில் இருந்த Stephan விருந்தினர்கள் முன்னிலையில் Oksana-வை  தலையிலும் உடம்பிலும் கடுமையாகத் தாக்கி உயிரிழந்த மணமகளை அருகில் இருந்த நீர் ஓடையில் வீசி எறிந்து உள்ளார். விருந்தினர்கள் பயத்தில் அவரை தடுக்க வில்லை என்றாலும் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் திருமணம் நடக்க இருந்த இடத்திலேயே மணமகனை கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர் குற்றவாளி என்று தெரிந்தும் அவரை திருத்தி விடலாம் என்று நம்பிக்கையுடன் திருமணம் செய்ய இருந்த Oksana பரிதாபமாக அவரது வாழ்க்கையை இழந்து விட்டார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |