Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ட்ரம்ப்….. செய்த செயலால் எழுந்த சர்ச்சை…!!

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்து வரும் அதிபர் ட்ரம்ப் முக கவசத்தை அகற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அதிபர் மருத்துவமனையில் இருந்து திங்கட்கிழமை அன்று வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அவருக்கு தொடர்ந்து தொற்றுக்கான சிகிச்சை வெள்ளை மாளிகையில் வைத்து கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து வெள்ளை மாளிகைக்கு புறப்படும் முன் தொற்றை நினைத்து யாரும் பயம் கொள்ளவேண்டாம். இருபது வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட நான் நன்றாகவே இருக்கிறேன் என டுவிட் செய்திருந்தார். பின்னர் மருத்துவமனையில் இருந்து வெள்ளை மாளிகைக்கு வந்த ட்ரம்ப் பால்கனியில் நின்றபடி தனது முக கவசத்தை எடுத்துவிட்டு கையை காட்டியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பு தொடர்ந்த முகக்கவசம் அவசியம் என்று அறிவுறுத்தி வரும் நிலையில் தொற்றினால் பாதிக்கப்பட்ட அதிபர் முகக்கவசத்தை பலர் முன்னிலையில் அகற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து மக்களுக்கு காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில் மீண்டும் அனைவரும் பணிக்கு திரும்புமாறு வலியுறுத்தினார். அனைவரும் கொரோனா தொற்றை  வெற்றி பெற போகிறீர்கள் என்று கூறிய ட்ரம்ப் சிறந்த மருத்துவ உபகரணங்கள் நம்மிடம் இருப்பதாகவும் அனைத்தும் சமீபத்தில் உருவாக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைவரது முன்னிலையிலும் நாம் தான் இருக்கப் போகிறோம். நான் அதனை உங்கள் தலைவராக செய்ய வேண்டியுள்ளது. ஆபத்து இருக்கின்றது என்பது எனக்கு தெரியும் ஆனால் நான் செய்ய வேண்டி இருந்தது. அதனால் முன்னின்று வழி நடத்தினேன். இப்போது நான் நன்றாக உணர்கிறேன். எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்திருக்கலாம். அதுபற்றி எனக்கு தெரியவில்லை. விரைவாக தடுப்பூசிகள் கிடைக்கும் என உறுதி அளித்தார். ஆனால் அடுத்த வருடத்தின் நடுப்பகுதி வரை எந்த தடுப்பூசியும் கிடைக்காது என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |