லடாக் பிரதேசத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.1 ஆக பதிவானது.
லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லேன் நகரின் கிழக்குப் பகுதியில் இன்று அதிகாலை லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 5.1 ஆக இது பதிவானது. நிலநடுக்கத்தின் போது வீடுகள் அதிர்ந்தால் மக்கள் பீதியடைந்தனர். எனினும் சேதம் எதுவும் ஏற்படாத தற்போதுவரை எந்த தகவலும் இல்லை கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக லடாக்கில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லடாக்கில் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.