Categories
உலக செய்திகள்

நவாஸ் ஷெரீப் மீது தேச துரோக வழக்கு …!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் உள்ளிட்டோர் மீது போலீசார் தேச துரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் ஏற்கனவே சிறை தண்டனை பெற்றுள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நீதிமன்றம் அனுமதியுடன் சிகிச்சைக்காக அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றார். தற்போதைய பிரதமர் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். லண்டனிலிருந்து வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக தன் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய நவாஸ் ஷெரீப் பிரதமர் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

செயல் திறனற்ற தகுதியற்ற ஒருவரை பிரதமர் பதவியில் அமரவைத்த மக்களுக்கு எதிராகவே போராட்டம் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். இதன் எதிரொலியாக நவாஸ் ஷெரிப் அவரது மகள் மரியம் மற்றும் அவர்களது கட்சி தலைவர்கள் மீது ராணுவம் மற்றும் நீதித்துறைக்கு எதிராக சதி திட்டம் தீட்டியதாக தேச துரோகம் உட்பட கடுமையான பிரிவுகளில் பாகிஸ்தான் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

Categories

Tech |