தேவையான பொருட்கள்:
அத்திக்காய் – 5 கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன் தண்ணீர் – 1/4 கப் இஞ்சி – 1/2 டீஸ்பூன் மிளகாய் – 3 கருவேப்பிலை – 4 கொத்தமல்லி – 5 உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – 1 கப்
அத்திக்காய் வடை செய்முறை:
அத்திக்காய் 5 எடுத்து, விதையை நீக்கி, 1/4 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பின்பு அதை மிக்ஸி ஜாரில் போட்டு மாவு பதத்தில் கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
தனியே கடலைப் பருப்பையும் 1 மணி நேரம் ஊறவைத்து அதையும் கரகரப்பாக அரைத்து எடுக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் இஞ்சி, நறுக்கிய மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி செடி, உப்பு இவை அனைத்தையும் சேர்த்து வடை பக்குவத்தில் நன்கு பிசைந்து கொள்ளவும்.
இறுதியில் வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் நாம் ஏற்கனவே பிசைந்து வைத்திருக்கும் கலவையை உள்ளங்கையால் உருண்டை பிடித்து எண்ணெயில் சிவக்க பொரித்து எடுக்கவும். அத்திக்காய் வடை ரெடி. அதை சாப்பிட்டு வந்தால் மலட்டு தன்மை நீங்கும்.