குணப்படுத்த முடியாத மஞ்சள் காமாலை நோய் ஏற்பட காரணமான ஹைபடைசிஸ்சி வைரஸை கண்டுபிடித்ததற்காக இந்த ஆண்டுக்கான மருத்துவத்துறை நோபல் பரிசு மூன்று பேருக்கு பகுந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் சேர்ந்த ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று தொடங்கி, வரும் 12ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஹைபடைசிஸ்சி வைரஸ் அடையாளம் காண வழி வகுத்த கண்டுபிடிப்புக்காக நோபல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஹாட் வி ஜய் அல்டர், சார்லஸ் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த மைக்கல் ஹாட்டன்க்கு மத்துவ நோபல் விருது அளிக்கப்பட்டுள்ளது.