Categories
தேசிய செய்திகள்

உ.பி. பாலியல் வன்கொடுமை – சாதி மோதல் உட்பட 19 வழக்கு பதிவுகள்…!!

உத்திரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பாக 19 வழக்குகளை அம்மாநில காவல்துறை பதிந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவுக்கான ஐநா அமைப்பும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக சாதி வன்முறையை தூண்ட முயற்சித்தல், பொது அமைதியை சீர்குலைக்க முயற்சித்தல் உட்பட 19 வழக்குகள் உத்தரபிரதேசம் முழுவதும் பதியப்பட்டு உள்ளது. ஹத்ராஸில் 6 வழக்குகள் பதியப் பட்டுள்ள நிலையில் அலகாபாத், அயோத்தி, லக்னோ உள்ளிட்ட பகுதிகளிலும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

Categories

Tech |