அதிமுக அவைத் தலைவர் பதவியை தன்னிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது என்று மதுசூதனன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.அதில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டு ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினர் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகின்றது. அதிமுக அவைத் தலைவர் பதவி யாருக்கு அளிப்பது என்று வாக்குவாதமும் நடந்ததாக தெரிகின்றது. இந்நிலையில் அதிமுக அவைத் தலைவர் பதவியிலிருந்து நான் மாற்றப்படுவதாக வெளியான தகவல் தவறு என்று மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
மேலும் சாகும் வரை நான்தான் அவை தலைவர் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் சசிகலா அதிமுக அவைத் தலைவர் பதவியில் பண்ருட்டி ராமச்சந்திரன்,பொன்னையா போன்றோரை நியமிக்க முற்பட்ட போதும் ஜெயலலிதா அவர்கள் என்னையே அதிமுக அவைத் தலைவர் பதவியில் நிலைபெற செய்ததாகவும் தெரிவித்துள்ளார். நாளை முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் மதுசூதனனின் இந்த அறிவிப்பு அதிமுக தொண்டர்கள் இடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது