Categories
தேசிய செய்திகள்

ஜி.எஸ்.டி. நிலுவை தொகையில் 20,000 கோடி உடனடியாக வழங்கப்படும்…!!

நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையில் 20 ஆயிரம் கோடி ரூபாய் மாநிலங்களுக்கு உடனடியாக வழங்கப்படும் என நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ளதால் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை ரிசர்வ் வங்கியிடம் கடனாகவோ அல்லது வெளிசந்தையிலோ  மாநில அரசுகள் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். டெல்லி மேற்கு வங்கம் பஞ்சாப், கேரளா, தமிழகம், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்கள் மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில் 42ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த திருமதி நிர்மலா சீதாராமன் நடப்பு ஆண்டுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையில் 20 ஆயிரம் கோடி ரூபாய் உடனடியாக மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் எனவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தொகையான 24 ஆயிரம் கோடி ரூபாய் அடுத்த வார இறுதிக்குள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Categories

Tech |