தனுசு ராசி அன்பர்களே..!
இன்று குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் உருவாகும். உத்தியோகத்தில் மறைமுக அவமானங்கள் வந்துச்செல்லும்.
தனிப்பட்ட காரியங்களில் தடைகள் நீங்கி வெற்றிக் காண்பீர்கள். சாதுர்யமான பேச்சு இன்று உங்களுக்கு கைக்கொடுக்கும். பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும். பணவரவை பொறுத்த வரை பொறுமைக்காக்க வேண்டும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் இருந்துக்கொண்டே இருக்கும். இன்று எந்தவொரு காரியத்திலும் அலட்சியம் காட்டவேண்டாம். பங்குச்சந்தையில் உள்ளவர்கள் பொறுமையாக ஈடுபடவேண்டும். நிதானமான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே வெளிப்படுத்த வேண்டும். கோபமான பேச்சை தவிர்ப்பது நல்லது. சிவபெருமானை வழிபடுவது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: கருநீல நிறம்.