கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் சொன்னச் சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். பயணங்களால் பயனடைவீர்கள்.
வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உங்களுடைய கை ஓங்கி நிற்கும். மன அமைதி பாதிக்கப்படும் சூழல் சற்று காணப்படும். திடீர் செலவுகளை தடுக்கவேண்டும். விருந்து மற்றும் விழாக்களில் கலந்துக்கொள்ளக் கூடிய சூழல் ஏற்படும். சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லவேண்டும். பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்படுங்கள். பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை. இன்று காதலில் உள்ளவர்கள் பொறுமைக்காக்க வேண்டும். நிதானமான போக்கையே வெளிப்படுத்த வேண்டும். கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு விஷயத்தையும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள், காரியங்களில் வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.