Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! உழைப்பில் முன்னேற்றம் ஏற்படும்..! நற்பலன் உண்டாகும்..!

மீனம் ராசி அன்பர்களே..!
எடுத்த வேலையை எப்படியாவது முடித்து விடவேண்டுமென்று கடுமையாக உழைப்பீர்கள். இதனால் அலைச்சல் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வீர்கள்.

யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதங்கள் எதுவும் வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டியதிருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் நல்லபலன் ஏற்படும். கணவன் மனைவி இருவரும் எந்தவொரு விஷயத்தையும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். மாணவ மாணவியர்கள் கல்வி விஷயத்தில் இன்று கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு பரிபூரணமாக இருக்கும். சிவபெருமான் வழிபாடு மனதிற்கு நிம்மதியளிக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.

Categories

Tech |