திருப்பதியில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் உண்டியல் வசூல் 2 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 10 நாட்களாக உண்டியல் வசூல். ஒரு கோடி ரூபாயை எட்டிய உண்டியல் வருமானம் நேற்று முன்தினம் அதிகபட்ச வருமானமாக கோடியாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர் திருப்பதி உண்டியல் வசூல் 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ள நிலையில் உண்டியல் வசூல் ரூ.1.44 கோடியாக வசூல் செய்யப்பட்டுள்ளது.