டாஸ்மாக் கடையில் மதுபானம் விற்ற ஊழியர்கள் கூடுதல் தொகை வசூல் செய்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முதியவர் அந்த தொகையை திரும்ப பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் இருக்கின்ற மதுபான கடைக்கு வாங்குவதற்கு முதியவர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் கூடுதலாக முதியவரிடம் பணம் வாங்கியுள்ளனர். அதனால் மிகுந்த ஆத்திரம் அடைந்த முதியவர்,ஏன் கூடுதலாக பணம் வாங்குகிறீர்கள் என்று டாஸ்மார்க் கடை ஊழியர்களிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு ஊழியர்கள், உடைந்த பாட்டில்கள் கணக்குகளை ஈடுகட்ட என்பதற்கு பதில் கூறியுள்ளனர். முதியவர் உடைந்த பாட்டில்களை காட்டுமாறு அவர்களிடம் கேட்டுள்ளார்.
அதன் பிறகு தொடர்ந்து வாக்குவாதத்தில் முதியவர் ஈடுபட்டதால், அவரிடமிருந்து கூடுதலாக வசூல் செய்த தொகையை டாஸ்மாக் ஊழியர்கள் திரும்ப கொடுத்தனர். அதுமட்டுமன்றி மற்றவர்களிடம் கூடுதலாக வாங்கிய பணத்தை திரும்ப அளிக்குமாறு முதியவர் வாக்குவாதம் செய்துள்ளார். அதனால் அனைவரிடம் வாங்கிய கூடுதல் பணத்தையும் டாஸ்மாக் ஊழியர்கள் திரும்ப அளித்தனர்.