Babyஅண்ணன் மீது இருந்த கோபத்தில் 3 வயது குழந்தையை அத்தைகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உத்தர பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் ரிங்கி மற்றும் பிங்கி ஆகிய இரண்டு சகோதரிகளும் தங்கள் அண்ணனுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு சப்னா என்ற பெண்ணுடன் அண்ணனுக்கு திருமணம் முடிந்தது. அண்ணனுக்கு திருமணம் முடிந்ததால் பாசமலர்கள் தங்கைகளின் செயலில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் அண்ணனும் தனது தங்கைகளை திட்டியுள்ளார். அதோடு தனது மனைவி முன்பும் அவர்களை கேவலமாக திட்டி பேசியுள்ளார். இதனை கேட்டுக்கொண்டிருந்த சப்னாவும் கணவரின் தங்கைகளான ரிங்கி மற்றும் பிங்கியை கடுமையாக திட்டியுள்ளார்.
இதனால் கோபம் கொண்ட சகோதரிகள் அண்ணனின் 3 வயது குழந்தையை கொலை செய்தனர். பின்னர் குழந்தையை போர்வையில் சுருட்டி தங்கள் வீட்டின் அலமாரியில் மறைத்து வைத்துள்ளனர். இந்நிலையில் குழந்தை காணவில்லை என்று சப்னா நொய்டா துணை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து விசாரணை மேற்கொளகையில் குழந்தையை அத்தைகள் கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் ரிங்கி மற்றும் பிங்கி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.