திருச்சி அருகே சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்கர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார்.
திருச்சி மணிகண்டம் அடுத்த வடக்கு பாகனூரைச் சேர்ந்தவர் ஆரோக்கிய இருதயசாமி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூர் ஆர்டிஓ அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி, முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கிய இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்தது.
இதில் ஆரோக்கிய இருதய சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நீதிமன்ற காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கண்டெய்னர் லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்துள்ளது.